பிரபல நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் படத்தின் புதிய அதிரடியான அப்டேட்!

பிரபல நடன இயக்குனரும், நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ‘ருத்ரன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

ராகவா லாரன்ஸ் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஒரு கையில் இரும்பு ஆயுதம் மற்றொரு கையில் வில்லனின் தலைமுடியை பிடித்து இழுத்தபடி ஆக்ரோஷமாக இருப்பதும் அவரை சுற்றி சிலர் விழுந்து கிடைப்பதுபோலும் இருப்பதுமான காட்சியை பார்க்கும் போது இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

கதிரேசன் இயக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார் என்பதும் ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவில் திருமுருகன் திரைக்கதையில் அந்தோணி படத்தொகுப்பில் இந்த படம் உருவாகிவருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.