ஹீரோவா நடிக்கும் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ – வேற லெவல் அப்டேட் கொடுத்த படக்குழு!

0
ஹீரோவா நடிக்கும் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ – வேற லெவல் அப்டேட் கொடுத்த படக்குழு!

வைகைப்புயல் வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடன இயக்குனராக பிரபுதேவா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இது குறித்த அறிவிப்பை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. சென்னை, மைசூர் என அடுத்தடுத்து நடந்த படப்பிடிப்பில் வடிவேலு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் நடித்து முடித்துள்ளனர். கடைசியாக படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்ட நிலையில் தற்போது மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் இந்த படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலால் நீண்ட காலமாக வடிவேலுவை திரையில் பார்க்காமல் இருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது,

No posts to display