Friday, March 29, 2024 1:44 am

சிபி சத்யராஜ் நடித்த ‘மாயோன்’ படத்தின் விமர்சனம் இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

சிபி சத்யராஜ், தான்யா ரவிச்சந்திரன், கே.எஸ்.ரவிக்குமார், ராதாரவி, ஹரிஷ் பேரடி உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் மாயோன். டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பாக அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். கிஷோர் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

தொல்லியல் துறை சார்பாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றில் கல்வெட்டுக்களை ஆராய செல்கின்றது குழு ஒன்று. கோவிலின் ரகசிய அறையில் புதையல் இருப்பது அந்தக் குழுவுக்கு தெரிய வருகிறது. அந்தக் கோவிலில் அமானுஷ்ய சக்திகள் இருப்பதாகவும், இரவு அந்தக் கோவிலில் இருப்பவர்களுக்கு ஆபத்து எனவும் அந்த ஊர் மக்களிடையே நம்பிக்கை இருந்துவருகிறது. இந்த நிலையில் தொல்லியல் துறையினர் கோவிலிலிருந்த கல்வெட்டுக்களை எப்படி மீட்கிறார்கள் என்பதே மாயோன் படத்தின் கதை.

படத்தில் முன் கதைகளை சொல்லும்போது பொம்மலாட்ட முறையில் சொன்னவிதம் நன்றாக இருந்தது. அமானுஷ்யமான நிகழ்வுகள் படத்தில் அடிக்கடிவருகின்றன. சிஜி காட்சிகளுக்கு கூடுதல் மெனக்கெட்டிருக்கலாம். நடிகர்களின் நடிப்பு, காட்சி உருவாக்கம், ஒளிப்பதிவு, இசை என அனைத்தும் சுமார்.

படத்தின் இயக்குநர் கிஷோரின் பெயர் தொழில்நுட்பக் கலைஞர்களின் வரிசையில் வருகிறது. படத்தின் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் தான் இந்தப் படத்துக்கு திரைக்கதை அமைத்திருக்கிறார். அவரது பெயர் படத்தில் பிரதானமாக காட்டப்படுகிறது. இயக்குநர் கிஷோர் தனது மோசமான இயக்கத்தின் தரத்தினால் அப்படி ஒதுக்கப்பட்டாரா என்பது தெரியவில்லை. இந்தப் படத்தின் தரம்தான் இவற்றை யோசிக்க வைக்கிறது.

பொதுவாக இளையராஜாவின் பின்னணி இசை குறித்து சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால் இந்தப் படத்தில் அவரது பின்னணி இசையும் சேர்ந்து நம்மை சோதிக்கிறது. சிஜி முறையில் உருவாக்கப்பட்ட சுரங்கப்பாதை, பாம்பு மற்றும் அனிமேட்டட் காட்சிகள் இரண்டாம் பாதியை முழுக்க ஆக்கிரமித்திருக்கின்றன. ஆனால் அவற்றின் தரம் குறைவாக இருப்பதால் படத்தின் சுவாரசியம் குறைகிறது.

படத்தின் முதல் பாதி பெரும் அழுத்தம் இல்லாமல் இருக்கிறது. காட்சிகளையும் முன்கூட்டியே கணிக்க முடிகிறது. இதனால் படம் தரவேண்டிய எந்த உணர்வையும் தராமல் நம் பொறுமையை மிக சோதிக்கிறது. மொத்தத்தில் வலுவற்ற திரைக்கதை மற்றும் மோசமாக படமாக்கப்பட்டவிதத்தால் இந்த மாயோன் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

- Advertisement -

சமீபத்திய கதைகள்