Tuesday, April 16, 2024 7:52 pm

விஜய்சேதுபதி நடித்த மாமனிதன் படத்தில் அஜித்தின் படத்தின் Reference .. இதை யாராச்சும் கவனிச்சிங்களா?

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

டைரக்டர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக இன்று தியேட்டர்களில் ரிலீசாகி உள்ளது. தர்மதுரை படத்திற்கு பிறகு மீண்டும் சீனு ராமசாமி – விஜய் சேதுபதி காம்போ இணைந்துள்ள படம்.

சமீப காலமாக விஜய் சேதுதியை வில்லனாக பார்த்த ரசிகர்களுக்கு, ஒரு மாறுபட்ட விஜய் சேதுபதியை மாமனிதன் படத்தில் காட்டி உள்ளார் சீனு ராமசாமி. நேர்மையான ஆட்டோ டிரைவராக, கிராமத்தில் வாழும் குடும்ப தலைவனாக, இரண்டு குழந்தைகளின் கல்வி வசதிக்காக போராடும் அப்பாவாக காட்டப்பட்டுள்ளார். தர்மதுரை படத்தின் வெற்றி பெற்றதுமே சீனு ராமசாமியின் மாமனிதன் படத்தில் தயாரித்து விட்டார். விஜய் சேதுபதியும் நடிப்பதாக ஒப்புக் கொண்டு, 2017 ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

தர்மதுரை படத்தின் வெற்றி பெற்றதுமே சீனு ராமசாமியின் மாமனிதன் படத்தில் தயாரித்து விட்டார். விஜய் சேதுபதியும் நடிப்பதாக ஒப்புக் கொண்டு, 2017 ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது.

2018 ம் ஆண்டு துவங்கிய மாமனிதன் படத்தின் ஷுட்டிங் 60 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கு சீனு ராமசாமிக்கு இடையேயான பிரச்சனை காரணமாக படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்தது. ஒரு கட்டத்தில் இந்த படம் கைவிடப்பட்டதாகக் கூட தகவல் பரவியது.

ஆனால் படத்தின் இசையமைப்பாளரான யுவன்சங்கர் ராஜா, தனது ஒய்எஸ்ஆர் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிப்பு பொறுப்பை ஏற்று, படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் இறங்கினார். கிட்டதட்ட 4 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு இன்று மாமனிதன் படம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டு, பாசிடிவ் விமர்சனங்களையும் பெற்றுள்ளது. ரசிகர்களுக்கும் மாமனிதன் படம் பிடித்திருக்கிறது.

தங்களின் வாழ்க்கையோ எங்கோ ஒரு இடத்தில் மாமனிதன் படம் கனெக்ட் ஆவதாகவும், படத்தை பார்க்கும் போது இது போல் நமது வாழ்க்கையிலும் நடத்திருக்கிறதே…நாமும் இப்படி செய்திருக்கலாமோ என்ற எண்ணம் மனதில் வந்து போகிறது என்பதே சாமாணி மக்களில் பெரும்பாலானவர்கள் சொல்லும் கமெண்ட்டாக உள்ளது. விஜய் சேதுபதியின் இந்த மாறுபட்ட அவதாரத்தை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.

இந்த சமயத்தில் மாமனிதன் படத்தில் அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்தில் reference இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்து சுட்டிக்காட்டி வருகின்றனர். அதாவாது படத்தின் டை்டில் கார்டில் ஒய்எஸ்ஆர் ப்ரொடக்ஷன்ஸ் என்ற கார்டு போடும் போது, மங்காத்தா படத்தில் பிஜிஎம் இசை இடம் பெறுகிறது. மங்காத்தா படத்திற்கும் யுவன் தான் இசையமைத்திருந்தார். அவரின் இசை படத்திற்கு மிகப் பெரிய பிளஸ் ஆக அமைந்திருந்தது.

ஏற்கனவே தனுஷின் ஒன்டர்பார் மூவிஸ் தயாரிக்கும் படங்களில் வேலையில்லா பட்டதாரி படத்தின் பிஜிஎம் இசை இசைக்கப்பட்டு வருகிறது. இதே போல் சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் படங்களிலும் டைட்டில் கார்டு போடும் போது சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தின் தீம் மியூசிக் பயன்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது யுவனின் தயாரிப்பு நிறுவனத்தின் படத்திற்கு மங்காத்தா தீம் மியூசிக்கை பயன்படுத்தி உள்ளனர்.

மாமனிதன் படத்தின் பிளஸ்சாக பார்க்கப்படும் விஷயங்கள் முக்கியமான ஒன்று, இந்த படத்தில் இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன்சங்கர் ராஜா முதல் முறையாக ஒன்றாக இணைந்து இசையமைத்துள்ளனர். கார்த்திக் ராஜாவும் கூட இந்த படத்தின் இசையை உருவாக்க இணைந்து பணியாற்றியதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சமீபத்திய கதைகள்