தில்லுமுல்லு செய்து டைட்டிலை வாங்கிய வாரிசு படக்குழு.. நடந்தது என்ன ? வெளியான அதிர்ச்சி உண்மை

0
75

நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

மேலும், சரத்குமார், குஷ்பூ, பிரபு, ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், ஷாம் என பல முன்னணி நட்சத்திரங்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த இப்படத்தின் First லுக் நேற்று மாலை வாரிசு எனும் தலைப்புடன் வெளிவந்தது.

இந்நிலையில், இந்த தலைப்பை முதன் முதலில் ரிஜிஸ்டர் செய்து வைத்திருந்தது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் இல்லை. கன்னன் என்பவர் தான் இப்படத்தின் தலைப்பை முதன் முதலில் ரிஜிஸ்டர் செய்துள்ளார்.

அவரிடம் விஜய் படத்திற்காக இந்த தலைப்பை கேட்டால், அதிக பணம் செலவு ஆகும் என்று எண்ணிய படக்குழு, வேறொரு நபரை, அறிமுக இயக்குனர் போல் தயார் செய்து, கண்ணனிடம் அனுப்பி, தலைப்பை சான்றிதழுடன் பெற்றுக்கொண்டுள்ளனர் விஜய் படத்தின் தயாரிப்பு நிறுவனம்.

vjvarisu

இதற்கு அவர் கேட்கும் தொகையை கொடுத்துவிட்டு, தலைப்பை பெற்று இருக்கலாமே. இதற்கு ஏன் இப்படி ஒரு கோல்மால் செய்யவேண்டும். உங்க கஞ்சத்தனத்திற்கு அளவே இல்லையா, என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.