கடந்த 10 வருட காலத்தில் செய்யாததை நேற்று பிறந்த நாளில் செய்த தளபதி விஜய்!

தளபதி விஜய் நேற்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பதும் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது ஏற்கனவே அறிந்தவை.

இந்நிலையில் தளபதி விஜய் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் படப்பிடிப்புக்கு செல்வதை தவிர்த்து விடுவார் என்றும் அன்றைய தினம் குடும்பத்துடன் அவர் பிறந்த நாளை கொண்டாடுவதை வழக்கமாகக் வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 10 வருடங்களின் பின் நேற்று ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பில் அவர் பிறந்த நாள் அன்றே கலந்துகொண்டார். தற்போது ‘வாரிசு’ படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் நேற்றுடன் அந்த படப்பிடிப்பு முடிவடைய உள்ளதால் நேற்றைய படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ‘வாரிசு’ படத்தின் 45 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதம் நடைபெற உள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.