இந்த ஒரு காரணத்திற்காக புஷ்பா 2 படத்தில் இருந்து ராஷ்மிகா வெளியேற்றம் !! தயாரிப்பாளர் கூறிய உண்மை

0
75
pushpa 2

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா நடிப்பில் வெளியான ‛புஷ்பா’ படம் வெற்றி பெற்றது. இதில் ஸ்ரீவள்ளி என்ற வேடத்தில் நடித்து அசத்தினார் ராஷ்மிகா. இந்நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. முதல்பாகத்தை விட இன்னும் பிரம்மாண்டமாய் அதிரடி ஆக் ஷன் உடன் கூடிய அசத்தலான கதையில் இந்த படம் தயாராக உள்ளது.

இதனிடையே ‛புஷ்பா 2’வில் ராஷ்மிகா இல்லை என்றும் அவர் கொல்லப்பட்டு விடுவார் என்பது போன்று கதை உள்ளதாக செய்திகள் பரவின. இதை மறுத்துள்ள இந்தபட தயாரிப்பாளர் ரவி ஷங்கர், ‛‛இன்னும் கதையே முழுதாக ரெடியாகவில்லை. அதற்குள் இஷ்டத்திற்கு ஆளாளுக்கு ஒரு கதையை பரப்பி விடுகின்றனர். இவை அனைத்துமே தவறானவை. நிச்சயம் ராஷ்மிகா புஷ்பா 2விலும் தொடருவார்” என்றார்.