விக்கி உடன் ஹனிமூன் சென்றும் சோகமாக இருக்கும் நயன்தாரா ? வைரலாகும் தகவல் இதோ !!

0
76

பாலிவுட், கோலிவுட் திரையுலகில் பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு கடந்த ஜூன் 9 ஆம் தேதி திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் உள்ள மகாப்ஸ் பைவ் ஸ்டார் ரிசார்ட்டில் கோலாகலமாக நடைப்பெற்றது.

இந்நிலையில்திருமணம் முடிந்த அடுத்த நாளே கோவில் தலங்களுக்குச் சென்று வரும் விக்கி – நயன் சமீபத்தில் மாமியார் வீடான கேரளாவிற்கு சென்று தடபுடல் விருந்து நடந்தது அடுத்ததாக கொச்சியில் உள்ள திருவுல்லாவில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தங்களுடைய ஹனிமூனை விக்கி – நயன் தாய்லாந்தில் கொண்டாடி வருகின்றனர். தனிமையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தேனிலவு கொண்டாடி வரும் நிலையில், சமூக வலைதளங்களில் அதன் புகைப்படங்களை வெளியிட்டு டிரெண்ட் செய்து வருகின்றனர்.

தாய்லாந்தில் பிஸியாக இருந்தாலும் இயக்குனர் நெல்சன் மற்றும் விஜய் அவர்களின் பிறந்த நாளிற்கும் வாழ்த்துக்களையும் பதிவிட்டுள்ளார் .மேலும் ஹனிமூன் சென்ற இடத்தில் கூட நயன் அவர்கள் மஞ்சள் கயிறு மட்டுமே அணிந்துள்ளார், திருமணத்தின் போது கையில் உள்ள காப்பு கயிறையும் இன்னும் அகற்றாமல் உள்ளார்.

தாய்லாந்தில் நயன் எதற்காகவோ காத்துக்கொண்டிருக்கும் சோகமான படத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு சோகமாக இருக்கும் இந்த ரியாக்சன் கூட செமதான் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.