பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்திக்கு உதவி செய்த நடிகர் கமல் !!

0
பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்திக்கு உதவி செய்த நடிகர் கமல் !!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 3-ஜூன் ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற “பத்தல பத்தல ” பாடலை கமலே எழுதி அவரே பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று யூடியூபில் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இந்நிலையில், இந்த பாடலை பார்வை திறனற்ற மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி தன்னுடைய குரலில் பாடி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் கூட சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து, கமல்ஹாசன் திருமூர்த்தியை நேரில் வரவழைத்துப் பாராட்டியுள்ளார்.

மேலும் திருமூர்த்தியின் விருப்பம் இசைக்கலைஞர் ஆகவேண்டும் என்பதைப் புரிந்துகொண்ட கமல்ஹாசன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் திருமூர்த்தியையை அவருடைய இசைப்பள்ளியில் சேர்ப்பதற்காக பேசியுள்ளார். அதைபோல் தனது “KM Music Conservatory” இசைப்பள்ளியில் திருமூர்த்தியை சேர்த்துகொள்வதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உறுதியளித்துள்ளார். திருமூர்த்தி இசை கற்றுக்கொள்வதற்கான முழுச் செலவையும் தானே ஏற்றுக்கொள்கிறேன் எனவும் கமல் அறிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் இந்த செயலை பார்த்த அவரது ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். இந்த மனிதர்க்கு ரசிகராக இருப்பதில் பெருமை படுகிறேன் எனவும், அந்த மனசு தான் சார் கடவுள் என ஆண்டவரை புகழந்து தள்ளி வருகிறார்கள்.

No posts to display