ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் ‘ஜவான்’ படத்தின் முக்கிய ரோலில் நடிக்கும் நடிகை இவரா?

0
72

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் விரைவில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இந்த படத்தில் அனிருத் இசையமைக்கும் பணியை கையாள்கிறார் என்பதும் அது மட்டுமின்றி தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இந்த படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த வருடம் ஜூன் 2 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தில் கேமியோ ரோலில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. அந்தவகையில் பாலிவுட்டில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் தீபிகா படுகோனே அந்த முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.

தீபிகா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும், அவரது கேரக்டர் படத்தின் திருப்புமுனையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ‘ஜவான்’ படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.