தனியார் பங்க் ஊழியரிடம் தர்ம அடி வாங்கிய விஜய் பட காமெடி நடிகர் !!

மேடை நாடக கலைஞரான பெஞ்சமின் சேரன் இயக்கத்தில் வெளியான ‘வெற்றிக் கொடி கட்டு’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘திருப்பாச்சி’ படத்தில் கண்ணப்பன் என்ற ரோலில் நடிகர் விஜய்க்கு நண்பராக நடித்து பிரபலமானவர். ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அருள், வேங்கை, ஐயா, திருப்பதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சேலம் கன்னங்குறிச்சி கம்பர் தெருவில் வசித்து வரும் இவர், நேற்று மதியம், தனது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்குக்கு சென்றார். அங்கு பெட்ரோல் போட கூகுள்பே மூலம் ரூ.350 அனுப்பியுள்ளார். ஆனால், அவரது வாகனத்திற்கு நீண்ட நேரமாகியும் பெட்ரோல் போடவில்லை.

இதுகுறித்து பங்க் ஊழியரிடம் கேள்வி எழுப்பிய பெஞ்சமினிடம், தகராறில் ஈடுபட்ட ஊழியர் கிருஷ்ணமூர்த்தி பெஞ்சமினை கையால் நெஞ்சில் குத்தியுள்ளார். இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து பெஞ்சமின் கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பங்க் ஊழியர் கிருஷ்ணமூர்த்தி என்பவரை கைது செய்தனர்.