அஜித்துடன் நேருக்கு நேர் போதும் சிம்பு !! ரசிகர்கள் அதிர்ச்சி

0
80

இயக்குனர் எச்.வினோத், நடிகர் அஜித்குமார் இருவரும் மூன்றாவது முறையாக “AK61” படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கிறார். இதற்கு முன்பு இவர்களது கூட்டணியில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் ஒரு சுமாரான வரவேற்பை பெற்றது.

இதில் வலிமை திரைப்படத்திற்கு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். இதனையடுத்து, இந்த AK61 படத்தை தாறுமாறாக எடுத்து ரசிகர்களுக்கு பிடித்த வாறு கொடுக்க படக்குழு தீவிரமாக வேலை செய்து வருகிறார்கள்.

வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தை தீபாவளிக்கு வெளியீட திட்டமிட்டுருந்த, நிலையில், சில காரணங்களால் டிசம்பர் மாதம் தள்ளி சென்றுள்ளதாக நேற்றிலிருந்து ஒரு தகவல் பரவி வருகிறது.

இதனையடுத்து, AK61 படம் டிசம்பர் மாதம் என்றால் கண்டிப்பாக கிருஸ்துமஸ் தினத்தன்று வெளியீட தயாரிப்பாளர் போனிகபூர் திட்டமிடுவார். அதைபோல், நடிகர் சிம்பு நடித்து வரும் பத்து தல படத்தையும் டிசம்பர் மாதம் தான் வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளார்களாம்.

பத்துதல படத்தின் ஷூட்டிங் இன்னும் 20 நாட்கள் பாக்கி இருக்கிறது. அவரது அப்பா டிஆர் ராஜேந்திரன் சிகிச்சை முடிந்த பிறகு அமெரிக்காவில் இருந்து திரும்புவார் மீண்டும் படப்பிடிப்பில் இறங்கி படத்தை முடிக்க டீம் காத்திருக்கிறது. எல்லாம் சரியாக நடந்தால், படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் என கூறபடுகிறது. இரண்டு படமும் ஒரே தினத்தில் வெளியாகுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.