உண்மையிலேயே நடிகை நயன்தாராவின் தமிழ் பெயருக்கு அர்த்தம் என்ன தெரியுமா ? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

0
74

நடிகை நயன்தாராவின் பெயருக்கு அர்த்தம் தற்போது வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர்.

7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் கடந்த 9ம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் என்கிற நட்சத்திர விடுதியில் திருமணம் கோலாகலமாக நடந்தது.

vigneshivannayanthara

திருமணம் முடிந்த நிலையில் மாப்பிள்ளை விக்னேஷ் தனது மனைவி நயன்தாராவுடன் தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். கேரளா மாநிலம் சென்ற விக்னேஷ் – நயன்தாரா ஜோடியை உறவினர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

கேரளா பாரம்பரிய உடையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி மற்றும் உறவினர்களுடன் கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.

ஹனிமூனுக்காக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். அங்குள்ள பிரபல சியாம் ஓட்டலில் இருவரும் தங்கியுள்ளனர்.

சில நாட்கள் அங்கிருந்துவிட்டு இருவரும் திரும்பி வந்து தங்களது திரைப்பயணத்தில் பிஸியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், நயன்தாராவின் தமிழ் பெயரை உருவாக்கியிருக்கிறார் கவிஞர் ஒருவர். கவிஞர் மகுடேசுவரன் என்பவர் கடந்த 2015ம் ஆண்டு இவரது முகநூல் பதிவு ஒன்றில் நயந்தாரா என்ற பெயருக்கு தமிழ் பெயர் உடுக்கண்ணி என்று கூறி அதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.

“நயன்தாரா’ என்னும் பெயர் தமிழ்ச்சொற்களால் ஆனதில்லை என்பதால் உரிய தமிழ்ப்பெயர் கூறுக’ என்னும் நண்பரின் பதிவொன்றைப் பார்த்தேன். நயனம் என்றால் கண்.

தாரா (தாரகை) என்றால் நட்சத்திரம். சில நாள்களுக்கு முன்வரை நட்சத்திரம் என்பதற்கு உரிய தமிழ்ப்பெயர் இல்லையோ என்று வருந்தியிருந்தேன்.

விண்மீன் என்பதும் கூட கவிதைப் பண்புள்ள உருவகப் பெயர் தான். உடுமலை என்ற ஊர்ப்பெயரை ஆராய்ந்த போது உடு’ என்பது நட்சத்திரத்தைக் குறிக்கும் தமிழ்ச்சொல் என்பது தெரிந்தது.

நயன்தாரா என்னும் பெயரைத் தமிழ்ப்படுத்தினால் ‘உடுக்கண்ணி’ என்று ஆகும்.” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவைப் பார்த்த நயன்தாராவின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாயடைத்துள்ளனர். தற்போது இந்த பதிவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.