ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகளுக்கு அம்மாவான சின்மயி !! வைரலாகும் புகைப்படம்

0
91

பாடகி சின்மயி மற்றும் நடிகர் ராகுல் ரவீந்திரன், கடந்த 2014 -ல் மே 5, அன்று சென்னையில் இந்து பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு இப்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது, ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில், சின்மயி மற்றும் ராகுல் ரவீந்திரன் தங்கள் குழந்தைகளுக்கு டிரிப்தா மற்றும் ஷர்வாஸ் என்று பெயரிட்டுள்ளனர். தற்போது, சின்மயி மற்றும் ராகுலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரபல பாடகியின் பிரசவத்தில் சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, அந்த இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது.

சின்மயி தனது குழந்தைகளின் விரல்களைப் பிடித்துக் கொண்டிருக்கும் புகைபடங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டு, “டிரிப்டா மற்றும் ஷர்வாஸ் என்று குறிப்பிடுள்ளார். இதற்கிடையில், அவர் தனது சமூக வலைதளங்களில் இந்த குழந்தைகள் வாடகை தாயின் மூலம் பெற்ற குழந்தையா.? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த கேள்விகளுக்கு பதிலளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட பாடகி, “நான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடாததால், எனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததா என்று என்னிடம் மெஜேஜ் செய்து கேட்கும் நபர்களை நான் மிகவும் நேசிக்கிறேன்.

நான் என்னைப் பாதுகாத்துக் கவனமாக கொண்டதால் எனக்கு தெரியும். இது எனது தனிப்பட்ட வாழ்க்கை, எனது குடும்பம், எனது நண்பர்கள் ஆகியவற்றிக்கு மட்டும் நான் கர்ப்பமாக இருந்தது தெரியும் என்று பதிலைத்துள்ளார்.