அதிமுக வை எதிர்க்கும் விஜய் ரசிகர்களின் அரசியல் கேலி போஸ்டரால் பரபரப்பு! நீங்களே பாருங்க

0
அதிமுக வை எதிர்க்கும் விஜய் ரசிகர்களின் அரசியல் கேலி போஸ்டரால் பரபரப்பு! நீங்களே பாருங்க

இன்று நடிகர் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், ‘கலகமில்லா எங்கள் ஒற்றை தலைமையே உங்களை வணங்கி வாழ்த்துகிறோம்’ என விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் தற்போது ஒற்றை தலைமை பிரச்சனை தலைவிரித்தாடி வருகிறது என்பதும் ஒற்றை தலைமையை பிடிப்பதற்காக ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவரும் தீவிர முயற்சி செய்து வருகின்றனர் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் மதுரையில் உள்ள விஜய் ரசிகர்கள் ‘கலகமில்லா எங்கள் ஒற்றை தலைமையே வணங்கி வாழ்த்துகிறோம்’ என விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இன்று வாரிசு திரைப்படத்தில் இரண்டாவது மற்றும் முன்றாவது லுக் போஸ்டர்கள் வெளியாகவுள்ளது. அதன்படி தற்போது இரண்டாவது லுக் போஸ்டர் 11.44 மணிக்கு வெளியாகியுள்ளது.

அதிமுகவில் நடைபெற்ற நடைபெற்று வரும் ஒற்றை தலைமை பிரச்சனையை கிண்டலடித்தே விஜய் ரசிகர்கள் இவ்வாறு போஸ்டர் ஒட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

No posts to display