கடந்த 5 வருட பாகுபலியின் சாதனையை முறியடித்த ‘விக்ரம்’! வெளியான சர்வே ரிப்போர்ட் இதோ !!

கடந்த ஐந்து வருடங்களாக அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை ‘பாகுபலி’ திரைப்படம் பெற்றிருந்த நிலையில், அந்த சாதனையை கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் முறியடித்து விட்டதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

vikram kamal

கடந்த 2017 ஆம் ஆண்டு எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவான ‘பாகுபலி’ திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, தமிழகத்தில் மட்டும் 152 கோடி ரூபாய் வசூலித்து கடந்த ஐந்து ஆண்டுகளாக அதிக வசூல் பெற்ற படங்களில் நம்பர் 1 இடத்தை தக்க வைத்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதி வெளியான உலகநாயகன் கமல்ஹாஸனின் ‘விக்ரம்’ திரைப்படம் 17 நாட்களில் 152 கோடியையும் தாண்டி வசூல் செய்த நிலையில் தற்போது தமிழகத்தில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை ‘விக்ரம்’ பெற்றுள்ளது. இந்த தகவலால் கமல் ரசிகர்கள் குஷியடைந்துள்ள நிலையில், இதனை அடுத்து ‘விக்ரம்’ பட குழுவினர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.