தளபதி விஜய் நடித்த வாரிசு பட போஸ்டர் இந்த படத்தின் அட்ட காப்பியா நீங்களே பாருங்க !!

0
100

தளபதி 66 டைட்டில் என்னவா இருக்கும் என காலையில் இருந்து ரசிகர்கள் மண்டையை பிய்த்துக் கொண்டு அலைந்த நிலையில், ஒரு வாரத்துக்கு முன்பே லீக்கான அதே ‘வாரிசு’ என்பது தான் டைட்டில் என்பதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் வந்தால் அதில் டீகோட் செய்ய ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றமாக சில காப்பி கேட் பிரச்சனைகள் தான் தென்படுகின்றன என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

சர்கார் படத்துக்கு பிறகு மீண்டும் கோட் சூட் லுக்கில் விஜய் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் காட்சி அளித்துள்ளார். ஆனால், அவர் அணிந்திருக்கும் கோட்டை பார்த்தால், படையப்பா படத்தில் வரும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தில் சூப்பர்ஸ்டார் அணிந்த அதே கோட் தான் வேண்டும் என அடம்பிடித்து தளபதி விஜய் வாங்கி மாட்டிக் கொண்டாரா? என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

He is Returning என இருந்த வரை நல்லா இருந்த ஹைப், The Boss is Returning என மாறியதும் சிவாஜி தி பாஸ் படத்தை ஞாபகப்படுத்துகிறதே என ரஜினிகாந்த் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை செம ஓட்டு ஓட்டி வருகின்றனர்.

சிவாஜியையும் கபாலியையும் கலந்து செய்த கலவையாக வரப் போகிறதா வாரிசு என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

மேலும், இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, மெஹ்ரின் பிர்சடா, ஷாம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த ’வாரிசு’ படத்தின் கதை குறித்த விவாதங்களும் சமூக வலைதளங்களில் ஆரம்பமாக தொடங்கி உள்ளன.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அலா வைகுந்தபுரமுலோ படம் மாதிரியே தான் இருக்கப் போவதாகவும் கூறுகின்றனர்.