அடப்பாவமே வாரிசுக்கு வந்த சோதனை !! தளபதி 66 டைட்டிலை வைத்து வெச்சு செய்யும் நெட்டிசன்கள்

0
118

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் படம் நெல்சன் இயக்கத்தில் வெளியானது. லாஜிக் மீரல்களால் படுமோசமான விமர்சனத்தை சந்தித்தும் வந்தார்.

இப்படத்திற்கு பிறகு இயக்குனர் வம்சி, தில்ராஜ், தமன் கூட்டணியில் தளபதி 66 படத்தில் விஜய் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் சரத்குமார், பிரபு, குஷ்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

குடும்ப கதையாக உருவாகி வரும் இப்படத்தின் டைட்டிலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் விஜய் பிறந்த நாளன்று வெளியாகவுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. இன்று மாலை 6 மணியளவில் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே ’வாரிசு’ என்ற டைட்டிலை படக்குழு வைத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியாகி வைரலானது. ஆனால் டைட்டில் வாரிசு என்று தான் என்று படக்குழு பர்ஸ்ட்லுக்குடன் வெளியிட்டுள்ளனர்.

இதை கண்ட நெட்டிசன்கள் என்ன டைட்டில் என்ன போஸ்டர் என்று கலாய்த்து மீம் போட்டு வருகிறார்கள். படத்தில் தொழிலதிபரின் மகனாக விஜய்யின் கதாபாத்திரம் அமைந்திப்பதாகவும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.