சிவகார்த்திகேயன் அடுத்த படமான பிரின்ஸ் படத்தை பற்றி வெளியான அப்டேட் இதோ !!

0
19

சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் தமன் உடன் பிரின்ஸ் படத்தின் கம்போஸிங்கில் கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘டான்’ படத்தின் வெற்றிக்கு சிவகார்த்திகேயன் தற்போது தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா கதாநாயகியாக நடிக்கிறார்.

இவர்களுடன் நடிகர் சத்யராஜ் மற்றும் பிரேம்ஜி இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. படத்திற்கு பிரின்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தற்போது படத்திற்கு இசையமைக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் தமன் உடன் பிரின்ஸ் படத்தின் கம்போஸிங்கில் கலந்து கொண்டுள்ளார். உடன் படத்தின் இயக்குனர் அனுதீப்-ம் காணப்படுகிறார்.

இன்று காலை 10.45 மணிக்கு படத்தின் அப்டேட் வெளியாக இருப்பதாகதெரிவித்துள்ளனர். நேற்று வெளியான புகைப்படம் மற்றும் இன்று அப்டேட் பார்க்கும் போது படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.