அஜித் உடன் மோதும் சிவகார்த்திகேயன் !! வெளியான் அதிர்ச்சி உண்மை இதோ

0
78
ak sivka

டாக்டர், டான் என அடுத்தடுத்த மெகா ஹிட் வெற்றிப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடித்துக் கொண்டிருக்கும் படம் எஸ்கே 20. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகியோர் தயாரிக்கின்றனர்.

vinodh ajith

காரைக்குடி, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடந்ததை ஒட்டி இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் டைட்டிலையும் சேர்த்து படக்குழுவினர் வெளியிட்டனர். பிரின்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தை வருகிற தீபாவளி அன்று ரிலீஸ் செய்யப்போவதாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ் மற்றும் இயக்குனர் ஒர் வீடியோ மூலம் வெளியிட்டனர். அந்த வீடியோ இப்பொழுது வைரலாகி வருகின்றது.

மேலும் அஜித்தின் ஏகே 61 படமும் தீபாவளி அன்று தான் வெளியாக உள்ளது. அஜித் தீபாவளி பண்டிகையின் போதுதான் வெளியிட விருப்பம் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன. கார்த்தி நடித்த சர்தார் படமும் தீபாவளி அன்று தான் ரிலீஸ் ஆக போவதாக இன்னொரு தகவல் வெளியானது. இந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். தீபாவளிக்கு அஜித்திற்கு போட்டியாக கார்த்தி, சிவகார்த்திகேயன் ஆகியோர் களமிறங்குவார்கள் ன எதிர்பார்க்கப்படுகிறது.