கைதி 2 வா இல்ல விக்ரம் 2 வா லோகேஷின் மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா ? வைரலாகும் தகவல் !!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படம் வசூலில் பெரிய சாதனை படைத்துள்ளது. உலகம் முழுவதும் இப்படம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்து இன்னும் பல திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் செய்து ஓடி வருகிறது.

மேலும், லோகேஷ் தனது முந்தைய படமான ‘கைதி’யில் இருந்து ‘விக்ரம்’ படத்தில் நடித்த கதாபாத்திரங்களை முற்றியிலும் சுவாரஸ்யமாக கொண்டு வந்து ராசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில், கார்த்தி நடித்த ‘கைதி’ வெளியான பிறகு, லோகேஷ் கனகராஜ் விரைவில் ‘கைதி 2’ படத்தை இயக்குவதை உறுதி செய்தார்.

இப்படத்தில், கார்த்தியின் கதாபாத்திரமான ‘டில்லி’ யார், அவர் என்ன என்பது பற்றிய பின்னணி கதையாக இருக்கும். அதாவது, சிறைக்கு செல்வதற்கு முன் என்ன செய்து வந்தார் என்பது பற்றியதாகும். தற்போது, ​​கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் இருவரும் ‘விக்ரம் 3’ இயக்கப்போவதாக தெரிவித்துள்ள நிலையில், ஃபஹத் பாசில் நடித்த அமரின் கதாபாத்திரத்திற்கு தனிக் கதையை லோகேஷ் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அதாவது, ‘சினாம்டிக் யுனிவர்ஸ்’ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் லோகேஷ் கனகராஜிடம் இருந்து ரசிகர்கள் பெரும் எதிரிபார்ப்பை கொண்டுள்ளனர். லோகேஷ் கனகராஜிடம் டில்லி மற்றும் அமர் கேரக்டருக்கான கதைகள் தயாராக இருப்பதாக ஏற்கனவே ‘கைதி’ படத்தில் நடித்துள்ள தீனா தெரிவித்தார்.

இந்நிலையில், ‘கைதி 2’ படத்தின் கதையானது கார்த்தி என்ற டில்லி மற்றும் ஹரிஷ் உத்தமன் என்ற அடைகளம் கதாபாத்திரங்களுக்கு இடையிலான பகையின் பின்னணியாக இருக்கும் என்றும் அதே வேளையில், ஃபகத் பாசிலின் அமர் கதாபாத்திரம் பற்றிய பின்னணியைக் கண்டுபிடிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.