இந்த ஒரு காரணத்தினால் முற்றிலுமாக விலகும் ஜோதிகா? பின்னணியில் மாமனார் !!கடுப்பில் சூர்யா

0
101

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்று மீண்டும் சமீபத்தில் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபகாலமாக சூர்யா-ஜோதிகா சமூகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பல விஷயங்களுக்கு குரல் கொடுத்தும் பல்வேறு விதமான சிக்கலுக்கும் உள்ளாகி வருகின்றனர். ஜோதிகா திருமணத்திற்கு பிறகு படங்கள் நடிக்கக்கூடாது என சூர்யாவின் குடும்பத்தினர் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தனர்.

ஆனால் பல வருடங்களுக்கு பிறகு தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் மட்டும் தேர்வு செய்து நடித்து வந்தார். ஆனால் இனிமேல் திரைப் படங்களில் நடிப்பதையும் முற்றிலுமாக தவிர்க்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு காரணம் ஜோதிகாவின் அக்கா நக்மா ஏற்கனவே அரசியல் இருந்து வருவதால் அவருடன் சேர்ந்து அரசியல் உதவிகளை செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவும் சமூகம் சார்ந்த விஷயங்களில் குரல் கொடுப்பதும் அவ்வப்போது தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருவதால் ஜோதிகா அரசியலுக்கு வருவதற்கு சூர்யாவும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறி வருகின்றனர்.

இதனால் தான் இனிமேல் ஜோதிகா படங்களில் நடிக்கப்போவதில்லை என சினிமா வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஜோதிகா அரசியலுக்கு வருவதால் தான் திரைப்படங்களில் நடிக்க மறுக்கிறாரா இல்லை சூர்யா குடும்பத்தினர் கொடுக்கும் அழுத்தம் காரணமாக நடிக்க மறுக்கிறாரா என்று தெரியவில்லை.

ஏற்கனவே காதல் செய்யும் போது திருமணத்திற்கு சூர்யா தந்தை தடையாக இருந்து பின் சில கட்டுப்பாடுகள் விதித்து ஒற்றுகொண்டார். இதையே தான் தற்போது நடக்கிறதா என்று சிலர் கூறி வருகிறார்கள்.