நெட்டில் கசிந்த நயன் – விக்கியின் ஹனிமூன் புகைப்படங்கள்!

0
76
nayan viki

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்தார் என்பதும் திருமணத்திற்குப் பின்னர் ஆன்மீகச் சுற்றுலா சென்று விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் ஹனிமூனுக்கு தாய்லாந்து நாட்டிற்கும் சென்றுள்ளனர்.

ஏற்கனவே தாய்லாந்து நாட்டிற்கு சென்ற புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவு செய்த நிலையில் தற்போது மேலும் சில புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

அதில் நயன் மற்றும் விக்கி ஆகிய இருவரின் ரொமான்ஸ் காட்சிகள் கண்கொள்ளா காட்சியாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்களுக்கு ’தாய்லாந்து நாட்டில் தாரத்துடன்’ என்ற கேப்ஷனுடன் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் தேனிலைவை முடித்துவிட்டு நாடு திரும்பியவுடன் ’அஜித் 62 படத்தின் பணிகளை மேற்கொள்வார் என்றும் இந்த படத்தின் திரைக்கதையை எழுதி அஜித்திடம் அனுமதி பெற்றவுடன் இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.