Thursday, April 25, 2024 1:54 pm

AK 61 தீபாவளி ரிலீஸ் இல்லை, படத்தின் ரீலிஸ் தேதி இதுவா? ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அஜித் !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் அடுத்த படம் இந்த ஆண்டின் இறுதியில் வெளிவரத் தயாராகி வருகிறது. படம் தீபாவளிக்கு வரும் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், இந்த ஆண்டு டிசம்பருக்குத் தள்ளப்படும் எனத் தெரிகிறது.

vinodh ajith

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் படப்பிடிப்பை நடத்தி வருகிறாராம். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

Ak

மேலும் ஜான் கொக்கன், ராஜதந்திரம் வீரா, நடிகை நாயனா சாய் ஆகியோரும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இதுவரை நடந்த 50 நாட்களுக்கும் மேலான படப்பிடிப்பில் H வினோத் 75 சதவீதத்துக்கும் மேலான படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

AK

தற்போது அஜித் ஐரோப்பா சுற்றுப்பயணத்தில் இருக்கும் நிலையில் அவர் இல்லாத காட்சிகளை இயக்குனர் H வினோத் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. சென்னையில் பிரபலமான வணிக வளாகம் ஒன்றில் இந்த காட்சிகளை அவர் படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

Ak

AK61 இன்னும் அதன் படப்பிடிப்பு முடிவடையவில்லை, ஜூலை இறுதிக்குள் மட்டுமே முடிவடையும். இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நிறைய ரிலீஸ்கள் வருவதால், படம் டிசம்பரில் வந்தால் நன்றாக இருக்கும் என்று படக்குழு கருதுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் முடிவு இறுதியா இல்லையா என்பதை!

- Advertisement -

சமீபத்திய கதைகள்