யாருக்குமே தெரியாத காதல் ரகசியத்தை பேட்டியில் போட்டுடைத்த அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி !!

தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளாக பல நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அப்படி முன்னணி நடிகராக திகழும் அஜித் அமர்களம் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து காதல் ஜோடிகளாக திகழ்ந்து வருகிறார்கள்.

பல படங்களில் ஜோடியாக நடித்த அஜித் சொந்த வாழ்க்கையை பற்றி ரகசியமாக வைத்து வருகிறார். அப்படி சில விசயங்களை அவருடன் பயணித்த நட்சத்திரங்கள் பகிர்ந்ததை போன்று அஜித் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிலி சில உண்மையை உடைத்துள்ளார்.

அஜித் இத்தனை ஆண்டு ரகசியமாக வைத்திருந்த விஷயங்களை ஷாமிலி வெளிப்படையாக கூறியுள்ளார்.அஜித் ஷாலினியை காதலிக்கும்போது பூக்களை கிப்ட்டாக அனுப்பி வைப்பாராம். அப்போது வீட்டில் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாக ஷாமிலி தான் ஷாலினிடம் கொண்டு போய் சேர்பாராம்.

மேலும் இவர்களுடைய காதலுக்கு நான் நிறைய உதவி செய்துள்ளேன்.அஜித், ஷாலினி இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் முழு சுதந்திரம் கொடுத்து கொள்வார்கள்.

அவர்களைப் பார்த்து நாம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அஜித், ஷாலினி இடையே நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை ஷாமிலி ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.