செம்ம பிட் உடன் அட்லாண்டிக் பெருங்கடலை கடந்த அஜித் !! வைரலாகும் புதிய புகைப்படம் இதோ !!

0
80

நடிகர் அஜித் குமார் மோட்டார் சைக்கிளில் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக நாம் முன்பே தெரிவித்திருந்தோம். நட்சத்திர நடிகர், தற்காலிகமாக ‘AK61’ என்று அழைக்கப்படும் தனது ucpoming படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவதற்கு தயாராக உள்ள நிலையில், அவர் தற்போது இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா முழுவதும் மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணத்தில் இருப்பதாக தெரிகிறது.

அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் தனது BMW பைக்கை எடுத்துக்கொண்டு தல அஜித் ஐரோப்பாவில் பயணம் மேற்கொள்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் இந்த புகைப்படங்களை வெளியிட்டார். ஐரோப்பா நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் தற்போது நடந்து வருகிறது. இங்கிலாந்தில் தொடங்கிய சுற்றுப்பயணம் தற்போது பெல்ஜியம் நாட்டில் தொடர்ந்து வருகிறது. பெல்ஜியம் நகர வீதிகளில் எடுத்த இந்த புகைப்படங்கள் வைரலாகின.

இங்கிலீஷ் சேனலில் அஜித், கப்பலில் இங்கிலாந்தில் இருந்து பெல்ஜியம் செல்லும் போது அட்லாண்டிக் பெருங்கடலில் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை சுப்ரஜ் வெங்கட் பகிர்ந்துள்ளார். Schengen விசாவுக்கு உட்பட்ட 26 ஐரோப்பிய நாடுகளில் இந்த பைக் பயணம் நிகழ உள்ளது.

வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது. AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புனேயில் ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்கி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், நட்சத்திர நடிகர் அடுத்த வாரம் முதல் புனேவில் ‘AK61’ படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் நடிகை மஞ்சு வாரியரும் விரைவில் படப்பிடிப்பில் சேர இருப்பதாக கூறப்படுகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க, ஜிப்ரான் இசையமைக்கிறார். இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் அஜித் தொடர்ந்து மூன்றாவது படம் இதுவாகும். நடிகர் அஜித் குமார் ‘வலிமை’ படத்தில் க்ளீன் ஷேவ் லுக்கில், ‘ஏகே61’ படத்தில் நீளமான தாடியுடன் நடிப்பார்.