உண்மையிலேயே தளபதி 66 படத்தின் தலைப்பு இதுவா ? செண்டிமெண்ட் பார்க்கும் தளபதி விஜய் !!

0
102
thalapathy 67

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படத்தில் நடிக்க இருக்கிறார்.இப்படம் மூலம் நடிகர் விஜய் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். தில் ராஜ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடிகர் சரத்குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

Thalapathy 66

தளபதி 66 படத்திற்கு பாடல்வரிகள்,தமிழ்வசனங்கள்,திரைக்கதை ஆகியவற்றை பாடலாசிரியர் விவேக் எழுதுவதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் விஜயின் வழக்கமான ஆக்சன் கமர்சியல் படமாக இல்லாமல், ஒரு பக்கா குடும்ப திரைப்படமாக இந்த திரைப்படம் இருக்கும் என கூறப்படுகிறது.

Thalapathy 66

இந்த படம் குடும்ப படம் என்பதால், நாளுக்கு நாள் இந்த படத்தின் எதிர்பார்ப்பு போல, படத்தின் நடிகர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போகிறது. இந்த நிலையில் படத்தின் தலைப்பை பற்றிய விவாதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. படத்திற்கு வாரிசு என்ற தலைப்பை உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியானது.

Thalapathy 66

இந்த தலைப்பு வெளியில் தெரிந்தவுடன் அரசியல் வாரிசா ? குடும்ப வாரிசா ? என வழக்கம் போல நெட்டிசன்கள் இணையத்தில் குழு ஆய்வை மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். இறுதியாக வாரிசு என்ற தலைப்புடன் இந்த படம் ஒரு குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்க பட உள்ளதால் அப்பாவிற்கும் மகனுக்கும் உள்ள பிணைப்பை வெளிக்காட்ட இருப்பதால் இந்த தலைப்பை வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.