தளபதி 67 படத்தின் விஜய்யின் கதாபாத்திரம் இதுவா !!வைரலாகும் தகவல் இதோ !!

0
22
thalapathy 67

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.இவர் நடிப்பில்வெளிவரும் அனைத்து படங்களும் ரசிகர்களிடத்தே பெரும் ஹிட் கொடுத்து விடும்.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் என்னதான் கடும் விமர்சனங்களை சந்திதாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலை குவித்திருந்தது என தகவல் கூறுகின்றளர்.

மேலும் இப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படத்தில் நடித்தி வருகிறார். அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து வருகின்ற ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் வெற்றி கூட்டணியான லோகேஷ் மற்றும் விஜய் மீண்டும் தளபதி 67 படத்தில் இணையவுள்ளனர்.

மேலும் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அனைவரும் தளபதி 67 படத்தை தான் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தை பற்றி சமீபத்தில் ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன் படி தளபதி 67 படத்தில் விஜய் ஒரு கேங்ஸ்டராக நடக்கின்றாராம். மேலும் படத்தில் 49 வயதான நபராகவும் விஜய் நடிப்பதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நாயகி மற்றும் பாடல்கள் இல்லை என்றும், முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் ஸ்டைலில் இப்படம் உருவாகவுள்ளதாகவும் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.