நடிகர் மாதவனின் ‘ராக்கெட்ரி‘ படத்தின் ரிலீஸ் தேதியை பற்றிய அப்டேட் இதோ !!

0
20

தற்போது ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி இருக்கும் நடிகர் ஆர்.மாதவன், இப்படத்தின் புதிய போஸ்டரை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இப்படம் ஜூலை 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து, படத்தின் விளம்பரத்தை முழுவீச்சில் மேற்கொண்டு வருகின்றனர்.

பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது. விஞ்ஞானியாக மாதவன் நடிக்கும் இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் பார்க்க காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால் இந்த படத்தை தமிழகத்தில் வெளியிடும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது வரிசையாக பிரபல நடிகர்களின் படங்களை வெளியிடுவது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட நடிகர் மாதவன் இந்த படம் ஜூலை முதலாம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளார்.

முன்னதாக, நடிகர் பெரியவர் நம்பி நாராயணன் வேடத்தில் நடிக்க கிட்டத்தட்ட 18 மணி நேரம் தயாராகும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார் மற்றும் ரசிகர்கள் அனைவரும் அவரது நடிப்பு ஆர்வத்திற்காக அவரைப் பாராட்டினர்.