தளபதி 66 படத்தால் ராஷ்மிகாவுக்கு ஏற்பட்ட நிலைமை.! வருத்தத்த்தில் ரசிகர்கள்…

0
24
thalapathy 66

தமிழில் அறிமுகமாவதற்கு முன்னரே தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஹீரோயின்கள் ஒரு சிலரே அதில் சமீபத்தில் மிக முக்கியமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் தெலுங்கில் முன்னனி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்த போது எப்போது தமிழில் எப்போது நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். கார்த்தியின் சுல்தான் படம் தமிழில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தற்போது வம்சி இயக்கி வரும் தளபதி விஜயின் 66வது படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

அதன் பிறகு பான் இந்தியா திரைப்படமான புஷ்பாவின் நடித்து இருந்தார். புஷ்பாவில் இவருக்கு கதாநாயகி வேடம் , ஹீரோவுடன் டூயட் , காதல் காட்சிகள் என்று மட்டுமில்லாமல், கதையோடு சேர்த்து முக்கிய கதாபாத்திரமாக தான் ராஷ்மிகா இருப்பார்.

இதன் முதல் பாகம் மெகா ஹிட்டாகவே, தற்போது இரண்டாம் பாகம் தயாராக உள்ளது. விரைவில் இதற்கான ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட உள்ளது. முதல் பாகத்தை விட பெரிய பட்ஜெட்டில் இந்த படம் தயாராக உள்ளதாம்.

ஆனால், இதில் ராஷ்மிகா ரசிகர்ளுக்கு சோகமான செய்தி என்னவென்றால், இரண்டாம் பாதியில் அதிக வேலை , முக்கியத்துவம் ராஷ்மிகாவுக்கு இருக்காதாம். முதல் பக்கத்திலேயே காதல் திருமணம் எல்லாம் முடிந்ததால், இரண்டாம் பாதியில் ஒரு சில காட்சிகளே வருவார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.