தொடர்ந்து மூணு வருஷமா ஒருத்தர்….அத மறக்கவே முடியாது.! ரம்யா பாண்டியன் கூறிய ரகசியம்

0
23

தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற படத்தின் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன் . இந்த படத்தை தொடர்ந்து மொட்டை மாடியில் போட்டோஷுட் நடத்தி ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் எடுத்து வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களின் மூலம் இவரது பெயர் வெளியே தெரிய ஆரம்பித்தது என்றே கூறலாம்.

அதன் பிறகு தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் இன்னும் பிரபலமானார். இதன் காரணமாகவே இவருக்கு பிக் பாஸ் 4-வது சீசன் தமிழ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் இவருக்கு ரமே ஆண்டாளும் இராவணன் ஆண்டாளும் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதிலும், நன்றாக நடித்திருந்தார்.

இது தொடர்பாக ரம்யா பாண்டியன் பேசியது ” நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் பொழுது பஸ்- லதான் போவேன். அப்போது ஒரு நபர் என்னை 3 வருஷமா பின்தொடர்ந்து வந்தார். அவரு என்னுடைய டிபார்ட் மென்ட் கிடையாது, ஆனால் நான் போகும் எல்லா நேரமும் அவர் அங்கு இருப்பார்.

அந்த 3 வருடத்திற்கு பிறகு என்னிடம் காதலை சொன்னார் எனக்கு உள்ள பலமாக இருந்தது ஆனால் அதை வெளியில் காட்டிக்காமல் நான் அவரிடம் சென்று இதுக்குமேல என் பின்னாடி வராதீங்க என்று சொன்னேன்” அந்த விஷயம் என்னால் மறக்கவே முடியாது “என்று கூறியுள்ளார்.