இவர் எப்படி நயன்தாரா கல்யாணத்தில் ? புகைப்படத்தை பார்த்து விக்னேஷ் சிவன் மீது கோபத்தில் ரசிகர்கள்

நடிகை நயன் தாரா 7 ஆண்டுகளுக்கு பின் தான் ஆசையாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேச்க் சிவனை ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியான பின்பு திருமணத்தை முடிக்கலாம் என்று கடந்த ஆண்டே திட்டமிட்டு இருந்தனர் நயன் – விக்கி. ஆனால் சில காரணங்களால் படம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

படத்தின் லாபத்தை வைத்துக்கொண்டு நயன்தாரா விக்னேஷ் சிவனை திருமணம் செய்ய முடிவெடுத்து ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. முக்கிய நட்சத்திரங்களை மட்டும் அழைத்திருந்தனர். அப்படி ரஜினிகாந்த், ஷாருக்கான், அனிருத், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மலையாள நடிகர் திலீப் நயன் தாரா திருமணத்திற்கு வந்திருந்த செய்தி வெளியாகியுள்ளது. நடிகை பாவனா பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் முக்கிய புள்ளியாக திலீப் பேசப்பட்டார்.

அப்படியொரு நடிகரை ஏன் திருமணத்திற்கு அழைத்தீர்கள் என்று நயன் தாரா ரசிகர்கள் விக்னேஷ் சிவனை கேட்டு வருகிறார்கள்.