சமந்தாவை விவாகரத்துக்கு பின் இந்த தமிழ் பட நடிகையுடன் ரகசிய உறவில் நாக சைதன்யா? வைரலாகும் புகைப்படம் !!

0
68

தெலுங்கு பிரபல நடிகரும், நடிகை சமந்தாவின் முன்னாள் கணவருமான நாகசைதன்யா ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்த நடிகையுடன் டேட்டிங் செல்வதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்நிலையில் நாக சைதன்யாவுக்கு வேறொரு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்களான நாகார்ஜுனா மற்றும் அமலா தம்பதிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் நாக சைதன்யா ஜுப்ளி ஹில்ஸ் என்ற பகுதியில் புதிய பங்களா ஒன்றை கட்டியுள்ள நிலையில் அந்த பங்களாவுக்கு பிரபல நடிகை ஷோபிதா துலிபாலாவை அடிக்கடி அழைத்து செல்வதாக கூறப்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலான நிலையில் இருவரும் டேட்டிங் செல்வதாகவும் கூறப்பட்டது.

நடிகை ஷோபிதா தற்போது துலிபாலா, பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் வானதி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.