விக்ரம் படத்தால் ரஜியை முந்திய கமல் !! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் இதோ !!

0
21

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், அனிருத் இசையில் உருவான ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த 3 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வசூல் மழை பொழிந்து வருகிறது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், அனைத்து ஊடகங்களும் இப்படத்துக்கு நல்ல விமர்சனங்களையே கொடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விக்ரம் திரைப்படம் இந்தியா தாண்டி வெளிநாடுகளிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதன்படி இதுவரை வெளிநாடுகளில் மட்டுமே 115 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதுவரை வெளிநாடுகளில் அதிகம் வசூல் செய்த கபாலி பட வசூலை விக்ரம் முந்தியுள்ளது. ஆனால் இதற்கு முன்பு ரஜினியின் 2.0 ரூ 150 கோடி வரை வெளிநாடுகளில் வசூல் செய்துள்ளது, அதனால் தொடர்ந்து 2.0 முதலிடத்தில் இருந்து வருகிறது.