உண்மையிலேயே பீஸ்ட் படத்துக்கும் ‘ஜெயிலர்’ படத்துக்கும் இடையே இப்படி ஒரு தொடர்பா ? நீங்களே பாருங்க !

0
91
Beast vs jailer

நடிகர் விஜய்யுடன் ‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு, இயக்குனர் நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தை இயக்க உள்ளார். மேலும், படத்தின் தலைப்பு சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. ரசிகர்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையில், படக்குழு ஒரு சிறப்பு போஸ்டருடன் அந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்நிலையில், இணையத்தில் வெளியான போஸ்டர் பார்த்த பிறகு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏன்னென்றால், கடைசியாக இயக்கிய பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை என்பதால் கடந்த படத்தை விட நெல்சனிடம் இருந்து புதுவித கதையை எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள்.

இதற்கிடையில், ‘ஜெயிலர்’ படத்தின் போஸ்டருக்கும், விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான நெல்சனின் ‘பீஸ்ட்’ படத்திற்கும் இடையே தொடர்பை ரசிகர்கள் பார்த்துள்ளனர். மேலும், இரண்டிற்கும் இடையே பொதுவான ஒன்று இடம்பெற்றிருந்த அந்த ரத்தக்கரை படிந்த கத்தி தான். அந்த வகையில், ‘பீஸ்ட்’ படத்தின் கடைசிகாட்சியில் இடம் பெற்றிருக்கும் அதே கத்தியை விஜய் பயன்படுத்தியுள்ளார், எனவே ரசிகர்கள் இரண்டு போஸ்டர்களையும் ஒன்றோடொன்று இணைத்து ஷேர் செய்து வருகிறார்கள்.

இதற்கிடையில், நெல்சனிடம் இருந்து ‘பீஸ்ட்’ படத்தை விட வலுவான படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள், மேலும் அவரும் படத்தின் மூலம் பிரமாண்ட ஹிட் அடிக்க தயாராகி வருகிறார். தற்போது, ‘ஜெயிலர்’ படத்தின் இறுதிக்கட்ட ஸ்கிரிப்டை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.