ஐரோப்பாவை தொடர்ந்து இங்கிலாந்து பைக்கில் சுற்றிவரும் அஜித் வைரலாகும் புகைப்படம் இதோ !!

0
46

ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, நடிகர் அஜித் பைக் மற்றும் கார் ரேஸ் பிரியர் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம் தான். அவரது படங்களில் கூட அவரது பைக் சேஸிங் காட்சிகள் ஏதோ ஒரு விதத்தில் இடம் பெற்றுவிடும். இன்னொரு பக்கம் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் தனது பைக்கை எடுத்துக் கொண்டு சுற்றுப்பயணம் கிளம்புவதையும் வாடிக்கையாக வைத்துள்ளார் அஜித். தற்போது வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடித்து வரும் அஜித், ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வந்தார்.

தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக இடைவெளி விடப்பட்டுள்ள நிலையில் ஐரோப்பாவிற்கு கிளம்பிச் சென்றுள்ளார் அஜித். இந்த பயணத்தை ஐரோப்பிய நாடுகளை பைக்கில் சுற்றிவரும் ஒரு பயணமாக அஜித் திட்டமிட்டுள்ளாராம். அதற்கேற்றபடி ஐரோப்பாவில் அஜித் தனது பைக்குடன் இருக்கும் புகைப்படங்களும் அங்குள்ள ரசிகர்களுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அஜீத் வெளிநாட்டின் சாலைகளில் பயணிக்கும் புகைப்படங்கள், அவர்களில் ஒருவர் தனது பைக்கில் பெட்ரோல் நிரப்புவது உள்ளிட்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளன. இந்த படங்கள் சில நாட்களுக்கு முன்பு நடிகர் லண்டனில் இருக்கும் இடத்தில் கிளிக் செய்யப்பட்டன

இந்த வார இறுதியில் நடிகர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.