கேலி கிண்டலுக்கு உள்ளான தளபதி விஜய்யின் காமன் டிபிக்கு வந்த சோதனை ! நீங்களே பாருங்க

0
கேலி கிண்டலுக்கு உள்ளான தளபதி விஜய்யின் காமன் டிபிக்கு வந்த சோதனை ! நீங்களே பாருங்க

தளபதி விஜய்யின் 48வது பிறந்தநாளை தாறுமாறாக கொண்டாட 48 சினிமா பிரபலங்களை வைத்து பிறந்தநாள் சிடிபியை வெளியிட்டுள்ளனர்.

நேற்று தனியாக நடிகர் ஜெயம் ரவி ஒரு பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டார். பீஸ்ட், கில்லி, மாஸ்டர், துப்பாக்கி, மெர்சல் என விஜய்யின் பிளாக்பஸ்டர் படங்களின் ஸ்டில்களும், ஃபுட் பால், ரோல்ஸ் ராய்ஸ் கார், ஜேடி என விஜய்யின் ஆன் ஸ்க்ரீன் மற்றும் ஆஃப் ஸ்க்ரீன் ஐயிட்டங்களையும் அழகாக அடுக்கி இருந்தனர்.

அடுத்ததாக சிங்கத்துடன் விஜய் கெத்தாக நிற்க அவரது கையில் உள்ள கொடியில் இந்தியில் தளபதி விஜய் என எழுதப்பட்டிருக்கிறது. வட இந்திய ரசிகர்கள் இப்படியொரு பர்த்டே காமன் டிபியை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிட்டு டிரெண்ட் செய்தனர்.

இந்த இரண்டு காமன் டிபிக்களுமே கலக்கலாக இருந்த நிலையில், கலாய்க்கப்படவில்லை.

இந்நிலையில், தற்போது 48வது பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ், அஜய் ஞானமுத்து, காஜல் அகர்வால், பிரேம்ஜி, ரத்னகுமார், வெங்கட் பிரபு, தமன், இயக்குநர் ஏ.எல். விஜய், பூஜா ஹெக்டே, மஞ்சு வாரியர் என மொத்தம் 48 பிரபலங்கள் வெளியிட்டுள்ள காமன் டிபி புகைப்படத்தை பார்த்து பங்கமாக ஓட்டி வருகின்றனர் அஜித் ரசிகர்கள்.

அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பல விஜய் ரசிகர்களுக்கும் பீஸ்ட் படத்தை போலவே இந்த காமன் டிபி அந்தளவுக்கு சிறப்பாக இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

அதிலும், குறிப்பாக என்னடா விஜய் போட்டோவை வரையச் சொன்னா அஜித்தின் வலிமை பட வில்லன் கார்த்திகேயாவின் போட்டோவை வரைஞ்சு வச்சிருக்கீங்க என மரண பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளனர்.

இதில், நடிகர் பிரேம்ஜி மாலை 7 மணிக்கு பதிலாக, முன்னதாகவே காமன் டிபியை வெளியிட்டு விஜய் ரசிகர்களிடமும் நல்லா வாங்கி கட்டிக் கொண்டது தனிக் கதை.

No posts to display