Thursday, March 28, 2024 9:00 pm

ஐரோப்பாவில் பைக் பயணம் செய்யும் அஜித் அந்த பைக்கின் மாடல் ஸ்பீட் எவ்வளவு தெரியுமா ? அம்மோவ்

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

நடிகர் அஜித்குமார் பிஎம்டபிள்யூ ஆர் 1200ஆர்டி (BMW R 1200RT) பைக்கில் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளார். இணையத்தில் வைரலாகிவரும் இதுகுறித்த படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

முன்னணி தென்னிந்திய நடிகர்களுள் ஒருவராக இருக்கும் அஜித்குமாரின் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் கூட்டணியில் மூன்றாவது படம் உருவாகி வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டிலேயே முடிவு செய்யப்பட்ட இந்த படத்திற்கு இன்னும் தலைப்பு இறுதிச்செய்யப்படாமல் தற்போதைக்கு ஏகே61 என அழைத்து வருகின்றனர்.

முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடர்ச்சியாக 47 நாட்கள் படமாக்கப்பட்ட நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி புனேவில் துவங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதற்கிடையில்தான் பிஎம்டபிள்யூ பைக் ஒன்றுடன் அஜித்குமார் இருக்கும் படங்கள் இங்கிலாந்தில் இருந்து வெளியாகி ரசிகர்களால் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

நடிகர் அஜித் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் தனக்கு பிடித்த பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது நமக்கு தெரிந்த விஷயமே. அப்போது ரசிகர்களால் எடுக்கப்பட்டு வெளியிடப்படும் படங்களை அவ்வப்போது நாம் சமூக வலைத்தள பக்கங்களில் பார்த்திருக்கிறோம். அதுபோன்றே தற்போது இந்த படங்கள் ட்ரெண்டாகி வருகின்றன. என்ன… இந்த படங்கள் இந்தியாவில் இல்லாமல், ஐரோப்பாவில் இருந்து வெளியாகியுள்ளன.

ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய அஜித் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அஜித் தனது உலக சுற்றுப்பயணத்தை துவங்கிவிட்டார் என்றே தோன்றுகிறது. ஏனெனில் கடந்த வருடம் நடிகர் அஜித்தின் மேலாளரும், நெருங்கிய நண்பருமான சுரேஷ் சந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பிரபல பைக் ரைடரும், உலக சாதனையாளருமான மாரல் யாசர்லூவை டெல்லியில் அஜித் சந்தித்ததாக கூறி, இருவரும் இருக்கும் படத்தை வெளியிட்டார்.

மேலும், அஜித் உலகம் முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு வருவதாகவும், இதற்காக சில பல யோசனைகளையும் அறிவுரைகளையும் மாரல் யாசர்லூவிடம் கேட்டு தெரிந்துக்கொண்டதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். மாரல் யாசர்லூ உலகம் முழுவதும் பைக்கில் 64 நாடுகளில் 7 கண்டங்களை கடந்து சாதனை புரிந்தவர் ஆவார்.

இத்தகையவருடனான சந்திப்பிற்கு பிறகு அஜித் தற்போது ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால், இது எப்போது வேண்டுமானாலும் உலக சுற்றுப்பயணமாக மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு தெரிந்தவரையில் அஜித் ஒரே மூச்சாக பைக்கில் உலக சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளமாட்டார் என்றே தோன்றுகிறது.

ஏனெனில் கடந்த ஆண்டில் நடிகர் அஜித் பைக்கில் மேற்கொண்ட முழு இந்திய சுற்றுப்பயணத்திற்கே கிட்டத்தட்ட 10 மாதங்களாகிவிட்டது. 3 கட்டங்களாக அஜித் மேற்கொண்ட இந்திய சுற்றுப்பயணத்தை அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் அதன்பின் டுவிட்டரில் வரைப்படத்துடன் வெளியிட்டு இருந்தார்.

ஆதலால் பைக்கில் உலக சுற்றுப்பயணம் என்றால் அதற்கு பல மாதங்கள், ஏன் வருடக்கணக்கில் கூட ஆகலாம். ஆனால் அஜித் முழுநேர பைக் ரைடர் கிடையாது. நடிப்பு என்று வேறொரு தொழிலும் உள்ளது. அதற்காக மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளையும் கருத்தில் கொள்வார். இருப்பினும் நடிகர் அஜித் எவ்வாறு யோசிப்பார் என்பது யாருக்குமே தெரியாது. எனவே, அதிரடியாக உலக பைக் சுற்றுப்பயணத்தை துவங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதிகப்பட்சமாக 124 பிஎச்பி மற்றும் 125 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் ஆர் 1200ஆர்டி பைக்கின் தயாரிப்பையும் விற்பனையையும் கடந்த 2019ஆம் ஆண்டில் நிறுத்திவிட்டது.

ஆதலால் இந்த படங்களில் அஜித் வைத்திருப்பது பழைய வெர்சன் மாடலே ஆகும். ஆர் 1200ஜிடி பைக்கிற்கு மாற்றாக அதனை காட்டிலும் ஆற்றல்மிக்க ஆர் 1250ஆர்டி பைக்கை பிஎம்டபிள்யூ களமிறக்கியது குறிப்பிடத்தக்கது.அஜித் போன்ற நடிகருக்கு இவ்வாறான விலையுயர்ந்த பைக்கை சொந்தமாக்குவது பெரிய விஷயமாகவே இருக்காது. ஆனால் இந்த ஆர் 1200ஆர்டி பைக் தற்சமயம் விற்பனையில் இல்லாததால், குத்தகைக்கே எடுத்திருக்க வேண்டும்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்