திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட நயன்தாரா !!

0
59

நடிகை நயன்தாரா திருமணத்திற்கு பின்பு தாய் வீட்டிற்கு மறுவீடு சென்றுள்ள நிலையில், தனது கணவர் மற்றும் தோழிகளுடன் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த 9ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றள்ளத. பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு நயன்தாரா பிரம்மாண்ட விருந்து மட்டுமின்றி விலை உயர்ந்த பரிசும் கொடுத்துள்ளார். திருமணம் முடிந்து திருப்பதி கோவிலுக்குச் சென்ற இந்த ஜோடிகள் சர்ச்சையில் சிக்கி பின்பு மன்னிப்பு பதிவு ஒன்றினை விக்கி வெளியிட்டார்.

இவர்களின் திருமணத்திற்கு பின்பு இவர்களைக் குறித்த தேடலை அதிகமாக நெட்டிசன்கள் தேடி வருகின்றனர். இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம், திருமணம் முடிந்ததும் அவர் அணிந்து வந்த புடவை, நகை, திருமணத்திற்கான செலவு, கொடுத்த பரிசுகள் என தலைப்புக்களை தான் இணையத்தில் அதிகம் தேடி வருகின்றனர்.

தற்போது கேரளாவில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு மறுவீட்டிற்கு சென்றுள்ள நயன்தாரா அங்கு பல இடங்களுக்கு சென்று புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

கேரளாவில் உணவகங்கள், கோவில்கள் என நேரத்தினை செலவிட்டு வரும் நயன்தாரா, ஹனிமூன் எங்கும் செல்லாமல் மீண்டும் படப்பிடிப்பிற்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் நயன்தாரா துளியும் மேக்கப் இல்லாமல் கணவர் மற்றும் தோழிகளுடன் எடுத்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது.