உண்மையிலேயே யார் தான் இந்த ஜெயிலர்? டைட்டிலில் குழப்பத்தை ஏற்படுத்தும் நெல்சன் டீம் அன்ட் கோ

0
41
jailer

பீஸ்ட் படத்தின் விமர்சனங்கள் மத்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 169 வது படத்தினை இயக்க நெல்சன் அதிகாரப்பூவமான தகவலை டைட்டில் மூலம் அறிவித்தார் நெல்சன் திலீப்குமார். ரத்தக்கரையுடன் பட்டாக்கத்தியை வைத்து ஜெயிலர் என்று பெயரிடப்பட்ட புகைப்படத்தினை நேற்று படக்குழு வெளியிட்டது.

படத்தில் வில்லனாக பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்கவுள்ளார் என்ற செய்தியும் வெளியானது. ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன் போன்ற நடிகைகளும் கமிட்டாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயிலர் படத்தில் யார் ஜெயிலராகவும் யார் வில்லனாகவும் நடிக்கவுள்ளார்கள் என்ற குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சஸ்பன்ஸ் நிறைந்த இந்த டைட்டில் வெளியானது முதல் கதை இப்படியிருக்குமா என்று ரசிகர்கள் யூகித்தும் வருகிறார்கள். சிவராஜ் குமார் குற்றவாளிகளை பாதுகாக்கும் ஒரு ஜெயிலர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், மிகப்பெரிய குற்றத்தை செய்து குற்றவாளியாக சிறையில் இருக்கும் ரஜினிகாந்தை பாதுகாப்பார் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் ஹாலிவுட் படத்தில் வெளியான எஸ்கேப் பிளான் என்ற படத்தின் காப்பியாக இப்படமும் இருக்கலாம் எனவும் இணையத்தில் தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. இதுவரை ரஜினி நடிக்காத ஒரு மாறுபட்ட ரோல் இருக்கும் என்று நெல்சன் நிருபித்தால் நல்லது என ரசிகர்கள் பாராட்டியும் வருகிறார்கள்.

இதற்கிடையே தற்போது அந்த போஸ்டரின் பின்னணி குறித்த தகவலை தான் இணையத்தில் நெட்டிசன்ஸ் பரப்பி வருகின்றனர். அதன்படி போஸ்டர் பின்னணிக்கு பயன்படுத்தியுள்ள புகைப்படம் இணையத்தில் இருந்தது என்றும் போட்டோ ஷூட் கூட இல்லாமல் இவ்வளவு அலட்சியம் ஏன் என்றும் கேட்டு வருகின்றனர்.

மேலும் ரஜினியின் ரசிகர்கள் அந்த புகைப்படங்கள் இது போன்ற விஷயங்களுக்கு பயன்படுத்த தான் இருக்கிறது, இன்னும் ஷூட்டிங் கூட தொடங்காத படத்திற்கு இப்படி தான் செய்ய முடியும் என கூறிவருகிறார்கள்.