படு மிரட்டலான அஜித் 61 கதைக்களம் – மங்காதாவிற்கு சவால் விடுமா?

0
95
Ak

‘ஏகே 61’ என்ற தற்காலிகப் படத்திற்காக இயக்குனர் எச் வினோத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ளார். தயாரிப்பாளர்களின் திட்டப்படி படத்தின் படப்பிடிப்பு சீரான வேகத்தில் நடந்து வருகிறது,

அவரது Ak 61வது படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு நடந்து வந்த நிலையில் இப்போது இடைவேளை விடப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

காரணம் அஜித் தனக்கு பிடித்தமான ஒரு விஷயத்தை செய்ய கிளம்பியுள்ளார், வேறுஒன்றும் இல்லை கடந்த சில வருடங்களாக பைக்கில் உலகத்தை சுற்ற முடிவு செய்து அதனை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த அஜித் இப்போது அடுத்த சுற்றுலாவை தொடங்கியுள்ளார்.

அவர் இந்த முறை UK, Europe போன்ற இடங்களில் பைக்கில் சுற்ற கிளம்பியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அஜித்துடன் பைக்கில் பயணம் செய்யும் சிலர் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

பிரம்மிப்பான பைக்குடன் அஜித் எடுத்த புகைப்படங்கள் இப்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதோ பாருங்கள்,

தற்போது இப்படத்தின் கதை பற்றி தகவல்கள் வெளியாகியுள்ளது. பேங்க் கொள்ளை மையமாக கொண்டு இக்கதையை உருவாக்கியுள்ளாராம் வினோத். அஜித் இப்படத்தில் வில்லத்தனமான கதாபாத்திரம் என்பது ஏற்கனவே தெரியும். அதற்காக நீண்ட தாடியுடன் புதிய லூகில் அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி செம வைரலாக பரவியது.

வலிமை படத்திற்கு கலவையான விமர்சனகள் வந்த நிலையில் இப்படம் அதற்கு இடம் கொடுக்காது என்று கோலிவுட் வட்டாரங்கள் சொல்லுகிறார்கள். வினோத் தனக்கென உள்ள பாணியில் இப்படத்தை உருவக்கவுள்ளராம். இதனால் இந்த முறை மிஸ் ஆகாது என்று நம்பலாம்…!

ஏற்கனவே இதே மாதிரியான கதைக்களத்தில் அஜித் மங்காதா படத்தில் நடித்திருந்தார். அந்த படம் எந் மாதிரியான ஹிட் என்று நாங்கள் சொல்லி தெரியவேண்டாம்.

அஜித் நடிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், மகாநதி சங்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நட்சத்திரத்தின் பல படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளதால், ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் படங்களை கிளிக் செய்வதை அழகான நடிகர் காணப்பட்டார்.