பார்ப்பதற்கு அசல் பாம்பு தலை போல் செவ்வாய் கிரகத்தில் தென்பட்டத்தை கண்டு அதிர்ந்து போன விஞ்ஞானிகள்

0
42

செவ்வாய் கிரகத்தில் மிக பெரிய பாம்புத்தலைப் போன்ற உருவம் தென்பட்டதால் விஞ்ஞானிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

பால்வெளியின் அழகான மற்றும் சிவப்பு கிரகம் செவ்வாய் கிரகமாகும். தொலைவிலிருந்து அதை பார்க்கும் போது அதன் ஜொலிக்கும் சிவப்பு நிறம் காண்போரை சிலிர்க்க வைக்கும் அளவு அவ்வளவு சிறப்பாக இருக்கும்.

மிக நீண்ட‌ நாட்களாகவே செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளை நாசா‌ மற்றும் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் செய்து வருகின்றன.

அத்தகைய செவ்வாய் கிரகத்தில் தான் தற்போது நாசாவின் கேமரா ஒரு அரிய புகைப் படத்தை எடுத்துள்ளது.

அந்த படத்தில் பாம்பு தலை வடிவமைப்பில் ஒரு பாறை ஒன்று இருப்பதும் அதற்கு பக்கத்தில் ஒரு சமதள பாறை இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த படம் தான் தற்போது விஞ்ஞான உலகத்தை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

பாம்பின் வாய்ப்பகுதி திறந்துள்ளது போல் அந்த பாறைப்பகுதி அமைந்துள்ளது. நாசாவின் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என பலரும் புகழ்ந்துத் தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.‌

அறிவியல் காதலர் பலருக்கும் இது விருந்தாக அமைந்துள்ளது.