அஜித்குக்காக உதயநிதி எடுத்த அதிரடி முடிவு !! வைரலாகும் உண்மை தகவல் இதோ

0
161

‘ஏகே 61’ என்ற தற்காலிகப் படத்திற்காக இயக்குனர் எச் வினோத்துடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித் இணைந்துள்ளார். தயாரிப்பாளர்களின் திட்டப்படி படத்தின் படப்பிடிப்பு சீரான வேகத்தில் நடந்து வருகிறது, மேலும் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது.

அஜித் நடித்த ‘ஏகே 61’ திரைப்படம் நிஜ வாழ்க்கை கதையை அடிப்படையாகக் கொண்டது என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. ‘ஏகே 61’ அல்லது ‘அஜித் 61’ ஒரு திருட்டு த்ரில்லர் என்றும், படம் வங்கிக் கொள்ளையைப் பற்றியது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இயக்குனர் எச்.வினோத் சில நிஜ சம்பவங்களில் இருந்து குறிப்புகளை எடுத்திருப்பது போல் தெரிகிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் உள்பட பல பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தையும் இவரின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் வெளியாகும் திரைப்படங்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் இருக்கிறது.

இந்நிலையில் கார்த்தியின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் சர்தார் திரைப்படத்தை உதயநிதி வாங்கியிருக்கிறார். படத்தை வாங்கிய கையோடு அவர் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்ற அறிவிப்பையும் கொடுத்துள்ளார்.

இதில் தான் தற்போது ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதாவது போனி கபூர் தயாரிப்பில் அஜித்நடித்து ஏகே 61 திரைப்படமும் தீபாவளியை குறி வைத்துதான் தயாராகிக் கொண்டிருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பே போனிகபூர் இது குறித்து வெளிப்படையாக தெரிவித்திருந்தார். அஜித்தும் தீபாவளிக்கு படத்தை வெளியிட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார்.

சர்தார் திரைப்படம் விநாயகர் சதுர்த்திக்கு தான் வெளிவர இருந்தது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் முடியாத காரணத்தினால் தீபாவளிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் அஜித்தின் திரைப்படத்தையும் உதயநிதி தான் வெளியிட இருக்கிறார்.

இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் மோதும் போது ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்திக்கும் சூழல் ஏற்படும். அதனால் உதயநிதி அதையெல்லாம் மனதில் வைத்துதான் சிக்கல் இல்லாமல் படம் ரிலீசாக வேண்டும் என்று ஒரு திட்டத்தை போட்டிருக்கிறார்.

அதாவது அவர் வெளியிடப்போகும் இந்த இரண்டு படங்களுக்கும் சரிசமமாக தியேட்டர்களை ஒதுக்குவது என்று அவர் முடிவெடுத்துள்ளார். இதன் மூலம் இரண்டு படங்களும் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் நடிக்கும் இப்படத்தில் மஞ்சு வாரியர், வீரா, ஜான் கொக்கன், மகாநதி சங்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். நட்சத்திரத்தின் பல படங்கள் இணையத்தில் வெளிவந்துள்ளதால், ஷூட்டிங் ஸ்பாட்டில் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் நட்சத்திரங்களுடன் புகைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது .