என்னை வலுக்கட்டாயமாக பார்ட்டிக்கு கூட்டிட்டு போய் அப்படி பண்ணாங்க? இப்படியொரு சம்பவத்தில் நிவேதா பெத்துராஜ்?

0
75
nevatha pethuraj

சினிமா நட்சத்திரங்கள் மட்டுமில்லாது பல்வேறு துறைகளில் பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லை நடைபெற்று வருவது நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகிறது.

அப்படி சினிமா நடிகைகளுக்கும் வாய்ப்பு கொடுக்கிறேன் என்று கூறி அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய கூப்பிடும் சம்பவமும் அதிகரித்து வருகிறது. இதை பல நடிகைகள் ஓப்பனாக மீடு அமைப்பு மூலம் உண்மைகளை கூறி வருகிறார்கள்.

அந்தவகையில் மதுரை பெண்ணாக துபாய் மாடல் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நடிகை நிவேதா பெத்துராஜ்.

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி டிக்டிக்டிக், திமிரு புடிச்சவன், பார்ட்டி, ஆல வைகுண்டபுரமுலு போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

இந்நிலையில் தனக்கு நடந்த மறக்கமுடியாத மீடு சம்பவம் ஒன்றினை சில வருடங்களுக்கு பகிர்ந்துள்ளார். ஒருமுறை மிகப்பெரிய பார்ட்டிக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து நான் அங்கு சென்றேன். பார்ட்டியில் பெரிய பிரபலம் தன் உடலில் சில இடங்களில் தொட்டு பேசியதாக தெரிவித்துள்ளார்.

இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். நான் அந்த பார்ட்டிக்கு சென்றிருக்க கூடாது எனவும் இதுபோல் நடந்தால் அப்போது கூறிவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.தற்போது தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு பக்கமே கவனம் செலுத்தி வருகிறார் நிவேதா பெத்துராஜ்.