ஆத்தி நயன்தாரா விக்னேஷ்சிவன் கல்யாணத்துக்கு செலவு மட்டும் இத்தனை கோடியா? நீங்களே பாருங்க

0
95

ஜூன் 9-ம் தேதி மகாபிலிபுரத்தில் திருமணம் முடிந்த பிறகு, நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கணவன்-மனைவியாக கோயில்களுக்குச் சென்று ஆசி பெறுகின்றனர். இந்த ஜோடி தற்போது கேரளாவில் உள்ள செட்டிகுளங்கரா தேவி கோவிலுக்கு சென்று அங்கு பூஜை செய்துள்ளார்கள்.

பிரம்மாண்ட முறையில் கடந்த 7 வருட காதலுக்கு பிறகு நடிகை நயன் தரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார். எப்போது கல்யாணம் என்று இருந்த இருவரும் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடைபெற்றது.

ரஜினி, ஷாருக்கான், அனிருத் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகு உடல் நிலையால் வரமுடியாத நயன் தாராவின் அம்மாவை சந்திக்க கொச்சின் சென்ற தம்பதியினர் சாமி தரிசனமும் செய்து வருகிறார்கள்.

திருமணத்தில் சில தோஷம் இருப்பதாகவும் விக்னேஷ் திரும்பவும் தாலி கட்டும் சடங்கு நடைபெறவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. திருமணத்திற்காக வைரம், தங்கம், உள்ளிட்ட விலையுயர்ந்த ஆடை அணிகலன்களை நயன் தாரா அணிந்திருந்தார்.

இதனை விக்னேஷ் சிவன் தான் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் திருமணத்திற்கு பிறகு சுமார் 2 லட்சம் பேர் சாப்பிடும் வண்ணம் தமிழகத்தில் இருக்கும் அனாதை இல்லங்கள் உள்ளிட்ட பலருக்கு உணவு வழங்கப்பட்டது.

மொத்த நயன் – விக்கி திருமணத்திற்கான செலவு 20 கோடி அளவில் செலவாகியுள்ளதாம். ஆனால், ஒரு ரூபாய் கூட அவர்கள் கையில் இருந்து காசு கொடுக்கவில்லையாம்.

திருமணத்தை படமாக்க நெட்பிளிக்ஸ் நிறுவனம் 25 கோடி அளவில் வாங்கியுள்ளது. இதற்காக தான் இத்தனை கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர் நயன் தாரா – விக்னேஷ் சிவன்.