Thursday, April 25, 2024 2:21 pm

உண்மையிலேயே விக்ரமின் பிரம்மாண்டமான வெற்றிக்கு முக்கிய காரணமே இது தான் !! லோகேஷ் கூறிய உண்மை இதோ !!

spot_img

தொடர்புடைய கதைகள்

‘STR 48’ படத்திற்காக இயக்குனர் தேசிங் பெரியசாமிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து !

இயக்குனர் தேசிங் பெரியசாமி தனது வெற்றிகரமான அறிமுகமான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'...

பருத்திவீரன் பட சர்ச்சைக்கு அமீர்க்கு சப்போர்ட் செய்த நந்தா பெரியசாமி !

இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனியைத் தொடர்ந்து பருத்திவீரன் பிரச்சனையில் தயாரிப்பாளர் அமீருக்கு ஆதரவாகப்...

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் ஓடிடி ரீலிஸ் தேதி இதோ !

கார்த்திக் சுப்பராஜின் சமீபத்திய, விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட, திரையரங்குகளில் வெளியாகும், ஜிகர்தண்டா...

முகன் ராவின் ஜின் படத்திலிருந்து வெளியான குட்டிமா பாடல் இதோ !

முகன் ராவின் ஜின் படத்தின் தயாரிப்பாளர்கள் குட்டிமா என்ற முதல் சிங்கிள்...
- Advertisement - Join NewsTIG WhatsApp Group
- Advertisement -

பெரும்பாலும் கிளாசிக் படங்களில் நடித்து வரும் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கமர்ஷியல் நாடகமான ‘விக்ரம்’ மூலம் தனது பாக்ஸ் ஆபிஸ் பலத்தை நிரூபித்துள்ளார். இப்போது, ​​’விக்ரம்’ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 12 இன் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், கமல்ஹாசனின் படம் மீண்டும் வரலாற்றை நிகழ்த்தியுள்ளது. இரண்டு வார இறுதிகளுக்குப் பிறகும், செவ்வாய்க்கிழமை வேலை செய்வதில் படம் திடமான வரவேற்பைப் பெறுவதால், பாக்ஸ் ஆபிஸில் அதிரடி நாடகம் குறைய மறுக்கிறது. இந்த அதிரடி நாடகம் 12வது நாளில் ரூ.15 கோடிக்கு மேல் சேர்த்து படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரூ.335 கோடியை நெருங்கியுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அற்புதமாக இயக்கியுள்ளார்.

தற்போது கூகுளில் அதிகம் தேடப்படும் நபர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான். மாநகரம், கைதி என்று மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து கமலை வைத்து இயக்கிய விக்ரம் படம் தமிழ்சினிமா உலகையே திருப்பிப் போட்டுவிட்டது. வெற்றிக்கே வெற்றி என்று கூட சொல்லலாம். 300 கோடியைத் தாண்டியும் இன்னும் வசூலை வாரி இறைத்துக் கொண்டு இருக்கிறது.

சூப்பர்ஸ்டாரை வைத்து எப்போது படம் எடுக்கப் போகிறீர்களா என்று கேட்டதற்கு லோகேஷ் கனகராஜ் அடுத்து எப்படிப் போதோ அப்படித்தான். எனக்கு ஆசை எல்லாம் இருக்கு. பேராசையே இருக்கு. என்கிறார்.

நடிகர் சம்பத் கூறுகையில் இந்தப்படம் எனக்கு பெரிய பிரேக் கொடுத்துருக்கு. இதுவரைக்கு 15 இன்டர்வியூ கொடுத்திருக்கேன். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்காக மிகப்பெரிய நன்றி என இயக்குனர் லோகேஷிடம் சிலாகித்து சொல்கிறார்.

லோகேஷ் கனகராஜ் தனது பேட்டி ஒன்றில் இவ்வாறு கூறுகிறார்.

படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு மேல் அதிக பயம் இல்லை. ஆனால் தோல்வி மேல் அதிக பயம் உள்ளது.

கமல் சாரோட எந்தப்படத்தையும் எந்தக்காலத்திலேயும் நான் ரீமேக் பண்ண மாட்டேன். ஏன்னா அதுல 10 பர்சண்ட் நியாயத்தைக் கூட என்னால செலுத்த முடியாது. அது ஒரு கிளாசிக். அப்படியே இருக்கட்டும்.

விக்ரம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் கமல் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துவிட்டார். இது முழுவதுமே உங்க படமாக இருக்கணும். நான் ஆக்டரா வந்துட்டு போறேன்.

நீ என்ன வேணாலும் பண்ணு. ரசிகர்களுக்குப் பிடித்த படமா இருக்கணும் என்றார் கமல். எனக்கு இந்த மாதிரி படம் பண்றது ரொம்ப இஷ்டம். எல்லாமே அமைஞ்சு வந்ததும் ஒரு காரணம் என்கிறார் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

- Advertisement -

சமீபத்திய கதைகள்