பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் பட போஸ்டரை வைச்சு செய்யும் ரசிகர்கள் !!

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி 100 கோடி வசூல் சாதனை படத்த படம் டாக்டர். இப்படத்தினை பார்த்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க பீஸ்ட் படமும் வெளியானது. படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீரல்களும் கதையம்சம் சரியில்லை என்று விமர்சனங்கள் எழுந்து நெல்சனை விடாமல் கலாய்த்து வந்தனர்.

இப்படமும் வெளியாகும் முன்பே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சனை தலைவர்169க்கு புக் செய்திருந்தார். படத்தை பார்த்து சற்று யோசித்த ரஜினிகாந்த் நெல்சன் மீது முழு நம்பிக்கை வைத்து படத்தினை அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இன்று காலை யாரும் எதிர்ப்பார்த்த படி தலைவர் 169 படத்தில் டைட்டிலை நெல்சன் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. ஜெயிலர் என்ற பெயரை வைத்து பட்டாக்கத்தியில் ரத்தக்கரையுடம் இருந்த புகைப்படம் இணையத்தை மிரட்டியது.

இந்நிலையில் நெல்சனை வைத்து இப்போது கலாய்க்க துவங்கியுள்ளனர் நெட்டிசன்கள். பீஸ்ட் படம் எப்படி மால்-குள்ளயே கதை சென்ற மாதிரி ஜெயிலர் படம் ஜெயிலுக்குள்ளயே போகுமா என்று கலாய்த்து வருகிறார்கள்.

மேலும் ரஜினிகாந்தின் ரசிகரான சிவகார்த்திகேயன் தந்தையும் ஒரு ஜெயிலர் என்பதால் படத்தில் ரஜினியின் பெயர் தாஸ் என்று வைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.