இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் படத்தின் திரைக்கதை இதுவா ? போஸ்டரில் கசிந்த தகவல் !!

0
39

அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு ரஜினி நடிக்க உள்ள திரைப்படம் ஜெயிலர். பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்க உள்ள திரைப்படமும் ஜெயிலர். இருவருக்குமே முந்தைய படங்கள் சரியாக போகாத காரணத்தால் கம்பேக் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.

இந்த ஜெயிலர் படத்தின் தலைப்பு தற்போது தான் ரிலீஸ் ஆகியுள்ளது. சூப்பர் ஸ்டார் பட தலைப்பு என்கிற எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சர்வ சாதாரணமாக வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரை கொண்டும், ஏற்கனவே வெளியான நெல்சன் படங்களை கொண்டும், ரசிகர்கள் தங்கள் இஷ்டத்திற்கு கதை கூற ஆரம்பித்து விட்டனர். நெல்சனின் முதல் படம் ஒரு வேன் சம்பந்தப்படுத்தி இருக்கும்.

இரண்டாவது படமான டாக்டர் ஒரு கடத்தல் ரெசார்ட் ஹோட்டல் சுற்றி இருக்கும். அதே போல, தளபதி விஜயின் பீஸ்ட் படம் முழுக்க ஒரு ஷாப்பிங் மால்-க்குள் இருக்கும். அதே போல இந்த ஜெயிலர் போஸ்டரில் ஜும் செய்து பார்த்தல் அதன் பின்னணியில் ஒரு ஜெயில் செட் இருப்பது தெரியும்.

அப்போ இந்த படம் ஜெயிலில் நடக்கும் கதை . ஒருவேளை, ஜெயிலில் ரஜினி குற்றவாளியாக மாற்றப்பட்டு இருக்கலாம், அதில் இருந்து எப்படி தனது கூட்டாளிகளுடன் தப்பித்தார் என்பதை நெல்சன் தனது திரைக்கதை மூலம் சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.