மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு, விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பீஸ்ட். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், செல்வராகவன், டாம் ஷைன் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், யோகி பாபு, ரெட்டின் கிங்ஸ்லி, சதிஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
முதல் 2 திரைப்படங்களை போலவே, பீஸ்ட் படத்திலும் டார்க் காமெடி மற்றும் ஆக்ஷனை கொடுத்திருந்தார் நெல்சன் இருந்தாலும் இப்படத்தில் அது ஒர்க்-அவுட் ஆகவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்று வரும் இப்படத்தை விஜய் ரசிகர்கள் வெறித்தனமான கொண்டாடினாலும், எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என பலரும் கருத்தை கூறி வருகின்றனர்.
பல லாஜிக் இல்லாத சீன்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் சிலர் கலாய்த்து வந்தனர். இப்படம் 1 மாதம் கூட முழுமையாக திரையரங்குகளில் ஓடாத நிலையில், OTT தளத்தில் ரிலீஸ் ஆனது. இதனால், மீண்டும் சில சீன் வீடியோக்களை பதிவிட்டு கலாய்த்து வருகினறனர்.
அந்த வகையில், கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் விமானத்தை இயக்கும் வீடியோ பதிவிட்டு மிகுந்த பேச்சு பொருளாக மாறியது. மேலும், தற்போது விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலிப்குமாரை ட்ரோல் மீம்ஸ் என நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் Shine Tom Chacko இந்த படத்தை கலாய்த்து உள்ளார். பீஸ்ட் படத்தில் தீவிரவாத கும்பலில் ஒரு நல்லவராக நடித்து இருந்தார். இவர் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர். இவர் தமிழில் ஹரி இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான வேங்கை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் பீஸ்ட் படத்தை கேலியாக பேசி இருக்கிறார். அந்த பேட்டியில், ‘ஒரு காட்சியில் விஜய் என்னை கட்டி அழைத்து செல்வார். பொதுவாக யாரவது ஒரு வெயிட்டை தூக்கினால் கூட முகத்தில் கஷ்டம் தெரியும். ஆனால், விஜய் தன் முகத்தில் அப்படி எதையும் காட்டவில்லை. இதுக்கு விஜய் சாரை குறை சொல்ல முடியாது. படக்குழு தான் காரணம்.
நான் இன்னும் படத்தை பார்க்கவில்லை. ஆனால், இந்த படம் குறித்த கேலிகளை பார்த்தேன் ‘ என கூறியுள்ளார். மேலும், தொகுப்பாளினி ‘பீஸ்ட் படம் உங்களுக்கு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல என்ட்ரி என்று நினைக்கிறீர்களா’ என்று கேட்க, அதற்கு பதில் அளித்த அவர் ‘பீஸ்ட் படமே தமிழ் சினிமாவிற்கு ஒரு நல்ல என்ட்ரி கிடையாது’ என்று கூறியுள்ளது பற்றி ரசிகர்கள் சிலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது நாள் வரை பீஸ்ட் படத்தை மற்றவர்கள் தான் கேலி செய்து இருந்தனர். ஆனால், அந்த படத்தில் நடித்த நடிகரே இப்படி சொல்லி இருப்பது விஜய் ரசிகர்களை கொஞ்சம் கடுப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இதனால் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர்.
உண்மையிலயே அசிங்கம் @Nelsondilpkumar– க்கு இல்லைடா. இந்த தாயொலிக்கு தான் இனிமே இவன இங்க இல்ல அங்கயும் கிட்ட சேர்க்கவே யோசிப்பாங்க. https://t.co/Rpyb67YzGy
— ISAI 😎 (@Mr_IsaiTwitz) June 15, 2022
Inga Gaali Aanadhu Nelson odathu illa…..
Ivanoda Tamil Career 😂 https://t.co/Y4kz3gzjgB
— 𝓐𝓷𝓫𝓾💜 (@DrAnbu_) June 14, 2022
படம் வரதுக்கு முன்னாடி அதே சீன பத்தி நான் விஜய் கிட்ட உருதுல பேசுனேன் ப்ரெஞ்சுல பேசுனேன்னு சொல்லிட்டு சுத்துனப்போ தெரியாததெல்லாம் இப்போ தெரியிதா இவனுக்கு?
படக்கதையையும் சீனையும் கேட்டு ஓகே பண்ணி நடிச்சி அதுக்கு எதிர்மறை விமர்சனம் வந்ததும் படத்துக்கும் தனக்கும்..(1/2) https://t.co/0ocxBUteeY
— ᴸᵉᵍᵉⁿᵈ (@Easwaran_Jeeva) June 14, 2022