விஜய் பிறந்தநாளில் தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.! என்ன தெரியுமா ?

0
31

பிரகாஷ் ராஜ், பிரபு, ஸ்ரீநாத், ஷாம், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா, சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார்.

thalapathy66

தளபதி விஜய் ரசிகர்கள் வருகினற ஜூன் 22 ஆம் தேதியை தங்கள் தளபதி பிறந்தநாளை மறக்கமுடியாத ஒன்றாக மாற்ற சமூக வளைதளங்களில் இரு மடங்காக உழைத்து வருகின்றனர். இதனால், அந்த பொன்னான நாளில் ‘தளபதி 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பிரமாண்ட விருந்தாக வெளியாகும் என்பது அவர்களிடையே இருந்து வரும் எதிர்பார்ப்பு.

இதற்கிடையில், ‘தளபதி 67’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பது ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டதால், இந்த கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் அதே நாளில் வெளியாகும் என்றும் சலசலப்பு வலுவாக இருந்து வருகிறது.

thalapathy66

இந்நிலையில், இந்த இரண்டு படங்த்தின் தயாரிப்பாளர்களும் சிறப்பு நாளில் ரசிங்கர்களின் மாபெரும் எதிர்ப்பார்ப்பை தீர்க்க விரும்பினாலும், ஒரே நாளில் இரண்டு அப்டேட்டும் வெளியாகாது என ஒரு சில தமிழ் சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

thalapathy66

அந்த வகையில், ‘தளபதி 66’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 21 ஆம் தேதி அதாவது பிறந்த நாளின் முன் தினமும் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஜய் பிறந்தநாளில் வெளியாகும் என ஒரு சில சினிமா துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Thalapathy66

‘தளபதி 66’ படத்தின் தற்போதைய ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது, மேலும் படப்பிடிப்பிற்காக பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஷெட்யூலுக்காக குழு மீண்டும் ஹைதராபாத் செல்கிறது, மேலும் படத்தின் முழு படப்பிடிப்பும் ஆகஸ்ட் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.